மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகுவை நியமித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுப்ரியா சாகு
சுப்ரியா சாகு
Published on

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகுவிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பில் இருந்த வெங்கடாசலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்த நிலையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அண்மையில் சோதனை நடத்தி ஏராளமான தங்கம் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் அவர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். இப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பாக இந்த துறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com