சூலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

சூலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் தென்னம்பாளையம் அருகே உள்ள விசாகா நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது53). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா(32). இவர் தென்னம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் முருகேசனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார். அவரது மனைவி வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டிற்கு மனைவியுடன் வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளதாகவும், இதனால் முருகேசன் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகேசன் கடிதம் எழுதி தனது தம்பிக்கு அனுப்பியுள்ளார். அதனை படித்து பார்த்ததும் அவர் வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். அப்போது வீட்டில் முருகேசன் தூக்கில் தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் சிசிக்சை பலனின்றி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்து. இதுகுறித்து சூலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com