சூலூர் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து

சூலூர் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திக்குத்து
கத்திக்குத்து
Published on

நீலாம்பூர்:

சூலூர் அருகே உள்ள அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன் மகன் சுப்பிரமணி (52). இவர் நேற்று இரவு கிழக்கு அரசூர் பகுதியில் , தென்னம்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்க வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென சுப்பிரமணியை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியது. கத்திக்குத்து காயத்தால் காயமடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று தாக்குதல் குறித்தும் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com