சுல்தான்பேட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

சுல்தான்பேட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சுல்தான்பேட்டை:

கோவையை அடுத்த சுல்தான்பேட்டை அருகே உள்ள குளத்துபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com