சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்- சிஆர்பிஎப் அதிகாரி பலி

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
சிஆர்பிஎப் கோப்ரா பிரிவு வீரர்கள் (கோப்பு படம்)
சிஆர்பிஎப் கோப்ரா பிரிவு வீரர்கள் (கோப்பு படம்)
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்புப்படை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், சுக்மா மாவட்டம் தாட்மெட்ரா பகுதியில் நேற்று இரவு சிஆர்பிஎப் படையின் கோப்ரா பிரிவு வீரர்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்ததில் ஒரு அதிகாரி உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com