சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் 2 பேர் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீக்குளிக்க முயன்ற நபர்களை படத்தில் காணலாம்.
தீக்குளிக்க முயன்ற நபர்களை படத்தில் காணலாம்.
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 31). இவருடைய நிலத்தை் அளவீடு செய்வதற்காக பணம் கட்டி அதற்கான ரசீதை தாலுகா அலுவலகத்தில் கொடுத்துள்ளார். ஆனாலும் நிலத்தை அளக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த லோகநாதன் அவருடைய நண்பர் சிவா என்பவருடன் நேற்று சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு இருவரும் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் மற்றும் தாசில்தார் ஆகியோர் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்தை அளக்க ஏற்பாடுகள் செய்வதாக கூறினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com