சென்னை புறநகர் சிறப்பு ரெயில் சேவை 244-ல் இருந்து 320 ஆக அதிகரிப்பு - தெற்கு ரெயில்வே

சென்னை புறநகர் ரெயில் சேவையின் ரெயில் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புறநகர் ரெயில்
புறநகர் ரெயில்
Published on

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் ரெயில் சேவை கடந்த மாதம் அத்தியாவசிய பணியாளர்களும், பெண்களும் பயணிக்க மீண்டும் தொடங்கியது. 

சென்னையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் நிறுவன ஊழியர்களுக்காக 244 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை புறநகர் ரெயில் சேவையின் ரெயில் எண்ணிக்கை டிசம்பர் 7-ம் தேதி முதல் 244ல் இருந்து 320ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை 7.00 - 9.30 மணி வரையும், மாலை 4.30 - 7.00 மணி வரையும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com