போடி அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

போடி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

போடி:

போடி அருகே உள்ள குப்பணாசாரிபட்டியை சேர்ந்தவர் முத்து அழகர்சாமி. இவரது மனைவி மேனகா. இவர்களது மகள் திரிஷா (வயது 15) போடி அருகே உள்ள சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் முத்து அழகர்சாமி இறந்து விட்டார்.

மேனகாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் திரிஷா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் மேனகா மருத்துவ சிகிச்சைக்காக போடிக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் திரிஷா சேலையால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து மேனகா போடி தாலுகா போலீசில் புகார் செய்தார், அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com