திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்

திருச்சியில் வீட்டிலிருந்து வெளியில் சென்ற கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

மலைக்கோட்டை:

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள ஜீவா நகர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வேல்முருகன் மகள் வினோதினி (வயது 17). இவர் உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முந்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்ற வினோதினி, மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி வினோதினியை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com