மார்த்தாண்டத்தில் மாணவி கடத்தல்

மார்த்தாண்டத்தில் 15 வயது மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் மாணவியும் அவரது அக்காளும் வீட்டில் இருந்தனர். அவர்களது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இரவு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர், இளைய மகளை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுபற்றி மூத்த மகளிடம் கேட்டபோது, வெளியே சென்றஅவள் பிறகு வரவில்லை என்று கூறியுள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து மாணவியின் தந்தை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், தனது மகளை யாரோ ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com