பள்ளி மாணவி கடத்தல்: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி கடத்திய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சந்தோஷ்குமார்
சந்தோஷ்குமார்
Published on

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள கூடச்சேரி மேலப்பட்டி போயர் தெருவை சேர்ந்த கொண்டன் மகன் சந்தோஷ்குமார் (வயது 21). இவர் கூலி வேலை செய்து வருகிறார். சந்தோஷ்குமாருக்கும், பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இந்தநிலையில் அவர் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். இதனால் மகளை காணாத அவளது தாய் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று இருவரும் திருச்செங்கோட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் செல்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து இருவரையும் மணியனூர் பஸ் நிறுத்தத்தில் போலீசார் மடக்கிப்பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மாணவியை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com