தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை அரசு உத்தரவு

18 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளது. அதில் 9 படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையையொட்டி மீன் பிடிக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை தாக்கி விரட்டியடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

சில நேரங்களில் படகுகளை பறிமுதல் செய்து மீனவர்களையும் சிறைபிடித்து செல்கின்றனர். அவ்வாறு சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் மத்திய-மாநில அரசுகளின் உடனடி நடவடிக்கை காரணமாக விடுதலை செய்யப்படுகிறார்கள். 

ஆனால் பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.

தற்போது 18 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளது. அதில் 9 படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த படகுகளை அழிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீதம் உள்ள 9 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com