காய்கறி,கீரைகளை விற்பனை செய்ய சிறப்பு மையம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக செயல்பட்டு வரும் தோட்டக்கலை பூங்காவில் விளையும் கீரை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒன்று வீதம் 11 ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பூங்காக்களில் தக்காளி, வெண்டைக்காய், மிளகாய், வெங்காயம், பாகற்காய், புடலங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும், தண்டங்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை, மிளகு தக்காளி கீரை, முருங்கைக்கீரை, வல்லாரை, பிரண்டைக்கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை வகைகளும் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அந்தந்த தோட்டக்கலை பூங்காக்களுக்கு அருகிலேயே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவையில் செயல் பட்டு வரும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காவில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தார்.

அப்போது கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, கணேஷ்பாபு உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com