சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரேநாளில் 8 அடி உயர்ந்துள்ளது.
சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை
Published on

கூடலூர்:

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு இந்த மழை மிகுந்த ஆறுதலாக உள்ளது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை முதல் இரவு வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 8 அடி உயர்ந்துள்ளது.

நேற்று அணையின் நீர்மட்டம் 105.28 அடியாகவும், வரத்து 13 அடியாகவும் இருந்தது. இன்று காலை 8 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 113.16 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 33 கனஅடியாகவும், திறப்பு 3 கனஅடியாகவும், இருப்பு 78.99 மி.கனஅடியாகவும் உள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 100 கனஅடி, இருப்பு 3899 மி.கனஅடி. வைகை அணையின் நீர்மட்டம் 63.58 அடி, வரத்து 40 கனஅடி, மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 4310 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம 42.60 அடியாக உள்ளது.

தேக்கடி 2.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 1.8, வீரபாண்டி 7.8, வைகைஅணை 5, மஞ்சளாறு 10, மருதாநதி 49, சோத்துப்பாறை 11, கொடைக்கானல் 66.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com