ராஜபாளையத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை குத்திக்கொன்ற மகன் கைது

ராஜபாளையத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை கத்தியால் குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 52). எலெக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாடசாமி. அவருடைய மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். மாடசாமி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாரியம்மாள், மகன்களுடன் ஊரில் வசித்து வந்தார். 

இந்தநிலையில் அவருக்கு, ராமருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்தனர். இதையறிந்து மாரியம்மாளின் மகன் மாடசாமி மதன் (25) மற்றும் உறவினர்கள் கண்டித்தனர்.

இருப்பினும் மாரியம்மாளுடனான தொடர்பை ராமர் கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாடசாமி மதன், ராமரை சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ராமர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி மதனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com