உளுந்தூர்பேட்டையில் தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது

உளுந்தூர்பேட்டையில் மது குடிக்க பணம் தரமறுத்த தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை தாலுகா குமாரமங்கலம் கிராமம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60). சம்பவத்தன்று இவரிடம் அவரது மகன் விஜயராமு(35) மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்து விஜயராமு அருவாமனையால் பாலுசாமியை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். 

இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து 3 தனிப்படைகள் அமைத்து விஜயராமுவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த விஜயராமுவை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com