சிறுகனூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

சிறுகனூர் அருகே தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சமயபுரம்:

சிறுகனூர் அருகே உள்ள தேவிமங்கலம் கரியமாணிக்கம் பிரிவுரோட்டை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 36). நேற்று முன்தினம் இவர் தங்களது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, பாம்பு கடித்தது. இதைப்பார்த்த கண்ணன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றி தகவலறிந்த சிறுகனூர் போலீசார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com