அரியலூர் மாவட்டத்தின் குறியீடாக பட்டுப்புடவை உற்பத்தி அமைய வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தின் குறியீடாக பட்டுப்புடவை உற்பத்தி அமைய வேண்டும் என மகளிர் சுய உதவி குழுவினருக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தின் குறியீடாக பட்டுப்புடவை உற்பத்தி அமைய வேண்டும்
அரியலூர் மாவட்டத்தின் குறியீடாக பட்டுப்புடவை உற்பத்தி அமைய வேண்டும்
Published on

அரியலூர்:

பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாம்பாளையம், உஞ்சினி ஆகிய கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலமாக தங்களது இல்லங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பட்டுப்புடவைகளை கலெக்டர் ரமண சரஸ்வரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளை மாநில அளவில் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள் மாவட்டத்தின் குறியீடாக அமைய வேண்டும் என மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, உஞ்சினி கிராமத்தில் இருந்து கீழராயம்புரம் வரை பிரதம மந்திரி கிராம சாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலை மற்றும் 3 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகளையும், சிறுகடம்பூர் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலமாக பனை ஓலைகளால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப்பொருட்களை பார்வையிட்டார். 

அப்போது உஞ்சினி குழு கூட்டமைப்பு மூலம் 7 குழுக்களைச் சேர்ந்த 57 பேருக்கு நெசவு தொழிலில் ஈடுபடுதல், விற்பனை செய்தல் மற்றும் கவரிங் நகை செய்தல் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்வதற்காக ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். ஆய்வின்போது, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) செல்வராசு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com