பயிர் இழப்பீட்டு தொகை வழங்க கோரி முற்றுகை போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்

பூதலூர் வட்டாரத்தில் 29-ந்தேதி பயிர் இழப்பீட்டு தொகை வழங்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பூதலூர்:

பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் செங்கிப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்குமார், துரைராஜ், சுப்பிரமணியன், டி.ராமச்சந்திரன், நாகராஜ், கண்ணகி, முகில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பூதலூர் தாலுக்காவில் மழை சேத பாதிப்பிற்கு அரசு அறிவித்த பயிர் இழப்பீட்டு தொகை இன்னும் பல விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.விடுபட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீட்டுத்தொகை வரவு வைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் இழப்பீடு வழங்காத வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகளை ஒன்றுதிரட்டி வரும் 29-ந்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசு அறிவித்த பயிர்கடன்நகைக்கடன் தள்ளுபடிக்கான ஒப்புகை ரசீதுகளை உடனடியாக விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.பூதலூர் தாலுக்காவில் பல கூட்டுறவு சங்கங்களில் இதில் மோசடிகள் நடைபெற்றுள்ளன.அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com