பெட்டிக்கடைக்காரரை தாக்கி பணம் பறித்தவர் கைது

பெட்டிக்கடைக்காரரை தாக்கி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிப்பு
பணம் பறிப்பு
Published on

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் செந்தில்குமாரின் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சிகரெட்டுகள் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றனர். அவர்களிடம் செந்தில்குமார் பணம் தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த 5 பேரும் அவரை தாக்கி விட்டு கடையில் இருந்த ரூ.40 ஆயிரத்தையும் பறித்து சென்றனர்.

இதுகுறித்து செந்தில்குமார் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெட்டிக்கடைக்காரரிடம் பணம் பறித்த முத்திக்கனி(வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தனுஷ், பாலாகார்த்தி, காஞ்சிவனம், ராம்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com