ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

சோழவந்தான்:

சோழவந்தான்-சமயநல்லூர் ரெயில் நிலையத்திற்கு இடையே மதுரை செல்லும் ரெயில் பாதையில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். இதைதொடர்ந்து மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். பிரவுன் கலர் பேண்ட், பச்சை நிற முழுக்கை சட்டை அணிந்திருந்தார். அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com