கபிலர்மலை அருகே கிணற்றில் மூழ்கி தையல் தொழிலாளி பலி

கபிலர்மலை அருகே கிணற்றில் குளித்த தையல் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
சேகர்
சேகர்
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பன். இவருடைய மகன் சேகர் (வயது 40). தையல் தொழிலாளி. இவர் நேற்று மதியம் கபிலர்மலை அருகே செம்மடையில் உள்ள சுப்ரமணியன் என்பவரது விவசாய கிணற்றில் மது போதையில் குளித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அங்கு குளித்து கொண்டிருந்த‌வர்கள அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மூழ்கிய சேகரின் உடலை தேடினர். இதையடு்த்து சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சேகரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.‌

இதையடுத்து போலீசார் அவரது உடலை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com