சேவூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேவூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேவூர்:

சேவூர் அருகே வடுகபாளையம் ராயகவுண்டன்புதூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் தினமும் மதுக்குடித்து மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுகாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து வெளியே சென்ற லோகநாதன் அருகில் உள்ள அவரது அக்காள் தோட்டத்து மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சேவூர் போலீசார் லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com