குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை காணலாம்
சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை காணலாம்
Published on

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. மேலும் பல்வேறு வகையான அலங்கார மற்றும் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பூங்காவில் படகு இல்லம் அருகே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகிறது. நீல நிறத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் அதன் அருகே நின்று செல்பி எடுத்து கொள்கின்றனர்.

குறிஞ்சி செடிகளில் 17 வகைகளை சேர்ந்த செடிகள் மிதமான காலநிலை நிலவும் நீலகிரி வனப்பகுதிகளில் காணப்படுகின்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்டெபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற குறிஞ்சி வகை பூக்கத் தொடங்கி உள்ளது. மேலும் சிம்ஸ் பூங்கா நர்சரியில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com