சேந்தமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

சேந்தமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 25) மற்றும் அஜித் (23) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வேகமாக சென்றுள்ளனர். அப்போது தொழிலாளியான வல்லரசு (34), மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பெரியசாமி, அஜித் ஆகியோர் வல்லரசுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வல்லரசு சேந்தமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, அஜித்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com