சேந்தமங்கலம் அருகே பெண் தற்கொலை

சேந்தமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள சின்னபள்ளம் பாறையில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கலா (வயது 34) என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் அங்கு தங்கியிருந்த வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கலாவின் சகோதரி கஸ்தூரி (36) சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலாவின் உடலை மீட்டு சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெண் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com