சேந்தமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் லாரி டிரைவர். இவரது மூத்த மகன் இந்திரகுமார் (வயது 20). இளைய மகன் விக்னேஸ்வரன் (18). இதில் இந்திரகுமார் கோவையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அவர் தம்பியுடன் நைனாமலை அருகே பள்ளிபட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நேற்று முன்தினம் அங்கு சென்றுள்ளார். அப்போது திடீரென இந்திரகுமார் கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஸ்வரன் போட்ட சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இந்திரகுமாரின் உடலை மீட்டனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com