சேந்தமங்கலம் அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி

சேந்தமங்கலம் அருகே விபத்தில் லாரி டிரைவர் பலியான சம்பவம் அப்பதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து பலி
விபத்து பலி
Published on

நாமக்கல்:

சேந்தமங்கலம் பொன்னேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிராஜ். இவரது மகன் கார்த்தி (வயது 33). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள பெருமாப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள நூற்பாலைக்கு லோடு ஏற்றி வந்த லாரியை அதன் டிரைவர் ஜெயவேல் (46) பின்னோக்கி இயக்க முற்பட்டார். அப்போது கார்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்தியை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com