செங்குன்றம் அருகே வாகனம் மோதி டிரைவர் பலி

செங்குன்றம் அருகே வாகனம் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

செங்குன்றம்:

செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் இனியவன் (வயது 26). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்திலிருந்து கோனிமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். கோணிமேடு ரவுண்டானா அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இனியவன் பரிதாபமாக செத்தார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com