சாலையை பழுது பார்க்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

செந்துறை அருகே சாலையை பழுது பார்க்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் கீழ்ப்பட்டியில் இருந்து குவாகம் செல்லும் சாலை உள்ளது. சமீபத்தில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்தன. அப்போது ஒப்பந்ததாரர்கள் தரமாக சாலை அமைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று, சீரமைக்கப்பட்ட சாலையில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. இதனைக்கண்ட கிராம மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுக்கும்படி போலீசார் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com