உசிலம்பட்டியில் 5 பைசாவுக்கு கோழிக்கறி விற்பனை

5 பைசா நாணயத்திற்கு கோழி இறைச்சி வழங்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டது.
கோழிக்கறி கோப்புப்படம்
கோழிக்கறி கோப்புப்படம்
Published on

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பேரையூர் சாலையில் பண்ணைப்பட்டி விலக்கு அருகே புதிதாக கோழி இறைச்சி கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு சலுகையாக 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஒரு கிலோ கோழி இறைச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்த பழைய 5 பைசா நாணயங்களை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து கடை முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்று கோழி இறைச்சியை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். நேற்று கார்த்திகை தீபவிழா என்றாலும், மாமிச பிரியர்கள் அதை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து கோழி இறைச்சியை வாங்கி சென்றனர். இதனால் பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். 5 பைசா நாணயத்திற்கு கோழி இறைச்சி வழங்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com