திருவையாறு அருகே தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை

திருவையாறு அருகே மூச்சு திணறால் பாதிக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவையாறு:

திருவையாறு அருகே பெரமூர் தெற்கு தெருவை சேர்ந்த மாணிக்கவேல் மகள் சிந்துஜா (வயது17). இவர் திருவையாறில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு சிறுவயது முதல் மூச்சு திணறல் பாதிப்பு இருந்தது. நேற்று மூச்சுத்திணறல் அதிகமானதால் மன வேதனை அடைந்த சிந்துஜா வீட்டு அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிந்துஜா உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com