தூத்துக்குடியில் பள்ளி மாணவன் தற்கொலை

தூத்துக்குடியில் தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் கோவில்பிள்ளைவிளையை சேர்ந்தவர் ரீகன்பிரபு. இவருடைய மகன் அந்தோணி என்ற பிரவீன்குமார் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பிரவீன்குமார், அதிக நேரம் செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தாராம். இதனை தந்தை ரீகன்பிரபு கண்டித்து உள்ளார். 

இதில் மனம் உடைந்த பிரவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com