ஆழ்வார் திருநகரி அருகே பள்ளி மாணவி தற்கொலை

ஆழ்வார் திருநகரி அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தென்திருப்பேரை:

ஆழ்வார் திருநகரி அருகே உள்ள மணல் குண்டு கண்ணன் மகள் கார்த்திகா (வயது16). இவர் நாசரேத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதுவரை ஆன்லைன் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கார்த்திகா பள்ளிக்கு போக மறுத்துள்ளார். இதை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை குடும்பத்தார் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே கார்த்திகா பரிதாபமாக இறந்தார். 

இதனை அடுத்து ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com