வேலூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது

வேலூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கைது
Published on

வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று 15 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கட்டாயப்படுத்தி, தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து அவரின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளிடம் விசாரித்தபோது நடந்ததை மாணவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com