கீழையூரில் பிளஸ் 1 மாணவி கடத்தல்?- போலீசில் பெற்றோர் புகார்

கீழையூரில் பிளஸ் 1 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவி கடத்தல்
மாணவி கடத்தல்
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அவுரிக்காட்டை சேர்ந்த 17 வயது சிறுமி கீழையூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த மாணவி மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் நாகை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் எங்களது மகளை கீழையூரை சேர்ந்த அருளானந்தம் என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிமிருந்து மகளை மீட்டு தாருங்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com