ஆலங்குடி அருகே பள்ளி மாணவி குளத்தில் மூழ்கி பலி

ஆலங்குடி அருகே குளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அஞ்சலி
அஞ்சலி
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அஞ்சலி (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஆலங்குடி அருகே குழந்தைவிநாயகர் கோட்டை பகுதியில் உள்ள உறவினர் சிவக்குமார் என்பவர் வீட்டுக்கு வந்து இருந்த அவர் ஒருசிறுமியுடன் அங்குள்ள பெரியகுளத்துக்கு குளிக்க சென்றார். 

இந்தநிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற அவருக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கினார். இதைபார்த்த அவருடன் சென்ற சிறுமி கூச்சல் போட்டார். அப்போது, அங்கு மரம்வெட்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து அஞ்சலியை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com