மின்னல் தாக்கி பள்ளி மாணவி பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கி 11-ம் வகுப்பு மாணவி பலியானார்.
பலி
பலி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையம் மதுரா ஓமுடி கிராமம் கொல்லை கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் மீனா என்ற மீரா (வயது 16). இவர் போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் மழை வருவது போல் காணப்பட்டது. அப்போது மீனா வீட்டின் எதிரில் உள்ள தென்னை மரத்தின் அருகில் தங்களது வெள்ளாடுகளை மரத்தடியில் கட்டுவதற்காக சென்றார்.

இந்த நேரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் மின்னல் தோன்றியது. அப்போது ஆடுகளை கட்டச்சென்ற மீனா மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com