சாத்தூர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

சாத்தூர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சாத்தூர்:

சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது தாயார் மாரியம்மாள் (வயது 88). இவர் கால்வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த இருக்கன்குடி போலீசார் மாரியம்மாளின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com