சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் போலீசார் அவர்களிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமர் மனைவி சின்னப்பிள்ளை(வயது 36), வள்ளி(75) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com