தக்கலையில் சந்தன மரம் வெட்டி கடத்திய 2 பேர் கைது

தக்கலையில் சந்தன மரம் வெட்டி கடத்தியவர்களை கைது செய்த போலீசார், இருவரையும் இன்று பத்மனாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கைது
கைது
Published on

தக்கலை:

தக்கலை பகுதியில் சந்தனமரங்கள் வெட்டி கடத்திய சம்பவம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் தக்கலை முத்தளக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஒடினர்.

சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்டம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமேஷ் (வயது31), ராஜா (52) எனவும் முத்தளக்குறிச்சி பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே முத்தளக்குறிச்சி பூதகுளம் அருகில் உள்ள சுடுகாட்டில் சந்தன மரங்கள் வெட்டி திருடப்பட்டதாக ஊர் தலைவர் ரமேஷ் குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான இருவரையும் இன்று பத்மனாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com