சமயநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சமயநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

வாடிப்பட்டி:

சமயநல்லூர் செக்கடிதெருவை சேர்ந்தவர் அக்னிஸ்வரர்(வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று வைகை நகர் பகுதியில் ஒரு வீட்டில் மேல்மாடி அமைப்பதற்கு கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது சென்ட்ரிங் கம்பியை தூக்கிச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தெருவில் செல்லும் மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டார். உடனே சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com