சமயநல்லூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வாடிப்பட்டி:

மதுரை சமயநல்லூர் அருகே உள்ள தோடனேரியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 75). இவர் வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக டவுன் பஸ்சில் வந்தார். பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com