

லக்னோ:
சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆசம் கான், அவரது மகன் அப்துல்லா கான் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இவருக்கும் கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி ஆசம் கானின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து ஆசம் கானும், அவரது மகனும் சிறையில் இருந்து லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். எனினும் ஆசம் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது.
ஆசம் கானுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.