திருவள்ளூர் அருகே சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், ஒண்டிகுப்பம் சேரன்தெருவை சோ்ந்தவர் டில்லிபாபு (வயது 30). இவர் காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அன்று கடையிலிருந்து இரவு டில்லிபாபு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி வீரலட்சுமி, கடைக்கு சென்று பார்த்தபோது, அவர் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து டில்லி பாபுவின் மனைவி தனலட்சுமி (28) திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதைத்தொடந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த டில்லிபாபுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com