கடன் தொகையை நண்பர் செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்து போட்ட சலூன் கடைக்காரர் தற்கொலை

பெரியகுளம் அருகே கடன் தொகையை நண்பர் செலுத்தாததால் நிதிநிறுவனத்தில் ஜாமீன் கையெழுத்து போட்ட சலூன் கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் நரசிங்கப்பெருமாள் (வயது 36). இவர், சலூன் கடை நடத்தி வந்தார். இவர் தனது நண்பர் சூரியசந்திரனுக்கு, பொக்லைன் எந்திரம் வாங்குவதற்காக நிதிநிறுவனத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டார். இந்தநிலையில் கடன் தவணை தொகையை சூரியசந்திரன் கட்ட தவறியதாக தெரிகிறது.

இதனால் நிதிநிறுவனத்தில் இருந்து நரசிங்கப்பெருமாளுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பினர். இதனால் மனம் உடைந்த நரசிங்கப்பெருமாள், நேற்று முன்தினம் தனது சலூன்கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நரசிங்கப்பெருமாளின் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com