

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள சேடர் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாலகவுரி (32). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்தநிலையில், பாலகவுரி கடந்த சில தினங்களுக்கு முன்பு சீட்டு பணம் செலுத்துவதற்காக தனது கணவரிடம் ஒரு தொகையை கொடுத்து அனுப்பினார்.
அந்த பணத்தை சதீஷ் செலுத்தாமல் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி பாலகவுரி, சதீசை கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசின் உடலை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.