டிஎன்பிஎல் கிரிக்கெட் - 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தியது சேலம்

சேலம் அணிக்கு எதிராக திருப்பூர் அணியின் கேப்டன் பிரான்சிஸ் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார்.
2 விக்கெட் வீழ்த்திய பெரியசாமி
2 விக்கெட் வீழ்த்திய பெரியசாமி
Published on

சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பெராரியோ 40 ரன்கள் எடுத்தார். அபிஷேக் 38 ரன்களும் எடுத்தார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். கேப்டன் பிரான்சிஸ் அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், திருப்பூர் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேலம் அணி சார்பில் பெரியசாமி, முருகன் அஷ்வின், பிரனேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com