சேலம் அருகே 17 வயது சிறுமி கடத்தல் - வாலிபர் மீது போலீசில் புகார்

சேலம் அருகே 17 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

சேலம் அம்மாபேட்டை பெரியார் நகரை சேர்ந்த ஒருவரின் 17 வயது மகள், அந்த பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களது பழக்கம் காதலாக மாறியது. 

இவர்களின் காதல் விவகாரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் கண்டித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், ஆசை வார்த்தை கூறி சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவர் கடத்தி சென்று விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மகளை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்குறிப்பிட்டு இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், சிவாவையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com