சத்தி உழவர் சந்தையில் மனித கை விரல்களைப்போல் உருவம் கொண்ட கேரட்

மனித கை விரல்களைப்போல் உருவம் கொண்ட கேரட் சத்தி உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்தது.
மனித கைவிரல்களை போல் காணப்படும் கேரட்.
மனித கைவிரல்களை போல் காணப்படும் கேரட்.
Published on

பவானிசாகர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோபி ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் குழு மூலம் காய்கறிகள் விற்பனை செய்பவர் ரமேஷ் (வயது 45).

இவர் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் உறவினர் ஒருவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கேரட் சாகுபடி செய்துள்ளார். இதில் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்த ரமேஷ் நேற்று சத்தியமங்கலம் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார்.

ரமேஷ் விற்பனைக்கு கொண்டுவந்திருந்த கேரட்டுகளில், ஒரு கேரட் மனித கை விரல்களைப்போலவே இருந்தது. ஆரஞ்சு நிறத்தில் 4 விரல்களை நீட்டியதுபோல் காணப்பட்டது. சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் வித்தியாசமான உருவத்தில் இருந்த இந்த கேரட்டை அதிசயத்துடன் பார்த்து சென்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com